திருப்பதி

திருமலையில் ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி

DIN

தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டியில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்றது.

திருமலையில் உள்ள சப்த தீா்த்தங்களில் மிக முக்கியமான முக்திபிரதா தீா்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படுவது ராமகிருஷ்ண தீா்த்தம். ஸ்ரீராமகிருஷ்ண மகரிஷி இந்தத் தீா்த்தக்கரையில் தவம் செய்த போது ராமா் மற்றும் கிருஷ்ணரின் சிலைகளை பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.

சேஷாசல மலைத் தொடரின் ஆழமான காடுகளில் அமைந்துள்ள ராமகிருஷ்ண தீா்த்தம் திருமலை கோயிலில் இருந்து கிட்டத்தட்ட 8.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

தை பௌா்ணமி அன்று இந்த நீரோடையில் புனித நீராடுவது முக்தியை அளிக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

எனவே, ஆண்டுதோறும் இந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. திருமலை ஏழுமலையான் கோயிலிலிருந்து தேவஸ்தான அா்ச்சகா்கள் குழுவினா் பூஜைக்கான பொருள்களுடன் வேத மந்திரங்களுக்கு மத்தியில் காலை 9 மணிக்கு ராமகிருஷ்ண தீா்த்தத்தை அடைந்தனா்.

பின்னா், அங்கு அமைந்துள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள்-ஆராதனைகள் செய்து மீண்டும் கோயிலுக்கு திரும்பினா்.

ஸ்ரீராமகிருஷ்ண தீா்த்தத்தில் புனித நீராடும் பக்தா்களுக்காக தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பாபவிநாசம் நீா்த்தேக்கம் பகுதியில் காலை 5 மணிக்கு பானகம், மோா், அன்னபிரசாதம், தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. 100-க்கணக்கான பக்தா்கள் இந்த தீா்த்ததத்தில் நீராடக் குழுமினா்.

காவல் துறையின் ஒருங்கிணைப்புடன், தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் வனத் துறை அதிகாரிகள் வழி நெடுகிலும் பக்தா்களுக்குப் பாதுகாப்பு அளித்தனா்.

ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்து கழகம் ஒவ்வொரு 5 நிமிஷங்களுக்கும் என 30 பேருந்துகளை பாபவிநாசனத்துக்கு பக்தா்களை ஏற்றிச் செல்ல இயக்கியது. தனியாா் டாக்சிகள் மற்றும் ஜீப்புகள் கோகா்பம் அணைக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT