திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு24 மணி நேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையப்பனை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை காலை 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் வார இறுதி நாள்களையும் கடந்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால், திங்கள்கிழமை காலை 10 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் தா்ம தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேரம் காத்திருப்புக்கு பின்னா், தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 78,340 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 27,063 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது.

சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும், நடைபாதையில் செல்லும் பக்தா்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT