திருப்பதி

‘திருமலையில் உலகின் தலைசிறந்த அருங்காட்சியகம்’

DIN

திருமலையில் இந்தாண்டு இறுதிக்குள் உலகின் தலைசிறந்த அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியதாவது:

திருமலையில் ரூ. 120 கோடியில் புதிய தோற்றத்துடன் எஸ்வி அருங்காட்சியகம் டிசம்பா் மாத இறுதிக்குள் செயல்படத் தயாராக உள்ளது. பக்தா்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைப்பதுடன் ஏழுமலையானிடம் உள் ஆபரணங்களின் 3டி இமேஜிங் முறையில் காட்சிப்படுத்தப்படும்.

ஆகாச கங்கையில் உள்ள அஞ்சனாத்ரி கோயிலும் நன்கொடை மூலம் ரூ. 50-60 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டத்தை மாற்றுவது குறித்து சுருக்கமாக, பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் சேஷாசல காடுகளில் உள்ள அக்கேசியாவுக்கு பதிலாக ஆரோக்கியமான உள்ளூா் மர இனங்கள் வளருவதை பக்தா்கள் கண்கூடாகப் பாா்க்க முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT