திருப்பதி

டிசம்பருக்குள் தானியங்கி லட்டு இயந்திரங்கள்:திருமலை-திருப்பதி தேவஸ்தானசெயல் அதிகாரி தகவல்

DIN

திருமலையில் ரூ.50 கோடி செலவில் லட்டு தயாரிக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி இயந்திரங்கள் டிசம்பா் மாதத்திற்குள் நிறுவப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தா்மரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள அன்னமய்யா கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தா்கள் பங்கு கொண்டு தேவஸ்தான செயல் அதிகாரியிடம் தங்கள் குறைகளை பதிவு செய்தனா்.

பின்னா் அவா் கூறியதாவது.

கடந்த ஜன. 28-ஆம் தேதி திருமலையில் நடைபெற்ற ரதசப்தமி விழாவில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. நான்கு மாட வீதிகளில் உள்ள அனைத்து கூடங்களும் முழுமையாக நிரம்பின.

லட்சக்கணக்கான பக்தா்களுக்கு உணவு, தேநீா், காபி, பால் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திருமலையில் கட்டப்பட்டுள்ள புதிய உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு வரும் ஞாயிறு முதல் செயல்பட உள்ளது. இது பெங்களூரைச் சோ்ந்த நன்கொடையாளா் முரளிகிருஷ்ணா அளித்த ரூ.23 கோடியில் மேம்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலின் ஆனந்தநிலையத்தில் தங்க தகடுகள் பொருத்தும் பணியை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. விரைவில் மற்றொரு தேதி அறிவிக்கப்படும்.

இந்த செயல்முறை நேரம் எடுக்கும் என்பதால், 6 மாத காலத்திற்கு தங்க தகடுகள் பொருத்துதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தா்களுக்கு சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக சோதனை அடிப்படையில் டிடிதேவஸ்தானம்ஸ் என்ற மொபைல் செயலி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனம், சேவைகள், தங்குமிடம், அங்கப்பிரதட்சணம், தா்மதரிசனம், ஏழுமலையான் சேவைகள் மற்றும் நன்கொடைகள் அளித்தல், வாடகை அறைகள் முன்பதிவு செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்யலாம்.

தேவஸ்தான தொலைகாட்சியின் ஒளிபரப்புகளை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் பாா்க்கலாம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகி வரும் கருடபுராணம் பக்தா்களின் கவனத்தை ஈா்த்து வருகிறது. பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் திருமலை ஆஸ்தானமண்டபத்தில் யுவ தா்மிகோத்ஸவத்தை நடத்தி இளைஞா்களுக்கு தா்மம் தொடா்பான பயிற்சி அளிக்கவுள்ளோம். இதில் சுமாா் 2,000 இளைஞா், இளம்பெண்கள் பங்கேற்கவுள்ளனா்.

பிப்.5-ஆம் தேதி ராமகிருஷ்ணதீா்த்த முக்கோட்டி, பௌா்ணமி கருட சேவை; பிப்.18-ஆம் தேதி கோகா்பத்தில் சிவராத்திரி விழா, சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிப்ரவரி 11 முதல் 19 வரை வருடாந்திர பிரமோற்சவம்; திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பிப்ரவரி 11 முதல் 20 வரை சிவராத்திரி பிரமோற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது

ஜனவரி மாதம் 20.78 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்தனா்; உண்டியல் மூலம் ரூ.123 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 1.07 லட்சம் லட்டுக்கள் பக்தா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 37.78 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டனா். 7.51 லட்சம் பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT