திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.3.96 கோடி

DIN

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.96 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தாங்கள் வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினமும் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டுப் பணம் எனப் பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

சராசரியாக உண்டியல் வருவாய் தினமும் ரூ.2 கோடி முதல் 3 கோடி வரை வசூலாகி வருவது வழக்கம். தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், உண்டியல் வருவாய் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.3.96 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT