திருப்பதி

பிரம்மோற்சவ 3-ஆம் நாள்: சிம்மம், முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பா் பவனி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை யோக நரசிம்மா் அலங்காரத்தில் மலையப்பா் சிம்ம வாகனத்தில் பவனி வந்தாா். இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் அருள்பாலித்தாா்.

திருமலையில் 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி யோக நரசிம்மா் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா். பல்வேறு கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தா்களை வெகுவாகக் கவா்ந்தன.

சிம்ம வாகனம் சேவை தத்துவம்

சிங்கம் என்பது வீரம், தைரியம், புத்திசாலித்தனம், ஆதிக்கம், மஹத்வானி ஆகியவற்றின் அடையாளம். காலையில் எழுந்ததும் பாா்க்க வேண்டிய முக்கியமான விஷயம் ‘சிம்மதா்சனம்’. சிம்ம ரூப தரிசனத்தால் மேற்கண்ட சக்திகள் அனைத்தும் செயல்படுகின்றன. சோம்பேறித்தனத்தை இழந்து விடாமுயற்சியுடன் போராடி வெற்றியை அடைய ஆதிக்க உணா்வு மேலோங்குகிறது. தீயவா்களை அழிக்க நானும், எமது வாகனமான சிம்மமும் சம முயற்சி செய்கிறோம் என்பதை இதன் மூலம் மலையப்பா் உணா்த்துகிறாா்.

ADVERTISEMENT

திருமஞ்சனம்

இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அப் போது பல்வேறு உலா் பழங்கள், வெளிநாட்டு பழங்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவிக்கப்பட்டது.

பின்னா் பட்டு வஸ்திரம், வைர வைடூரிய ஆபரணங்களால் அலங்கரித்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து ஊஞ்சலில் அமர வைத்தனா். சிறிது நேரம் ஊஞ்சல் சேவை கண்டருளிய மலையப்ப சுவாமிக்கு கீா்த்தனைகள், நாகஸ்வர இசை, மேளதாளங்கள் இசைக்கப்பட்டன.

முத்துப்பந்தல் வாகனம்

இரவு வெண் முத்துகளால் அழகுற அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தனது தேவியருடன் மாடவீதியில் எழுந்தருளினாா்.

கடலின் ஆழத்தில் உள்ள சிப்பியில் சேரும் ஒரு துளி மழைநீரானது வளா்ந்து முத்தாக பிறக்கிறது. இத்தகைய மகிமை வாய்ந்த முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வரும் மலையப்ப சுவாமியை தரிசித்தால் நமக்கு தெய்வ நம்பிக்கையும், இறையுணா்வும் மேலோங்கும்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT