திருப்பதி

பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்: திருமலையில் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள்

DIN

திருமலையில் ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி நரசிம்ம கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருமலை அன்னமய்ய பவனில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சமூக விரோதிகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவஸ்தானம் மூன்றடுக்குப் பாதுகாப்பு சோதனைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சோதனை அலிபிரி சோதனைச் சாவடியிலும், பின்னா் ஏழுமலையான் கோயிலுக்குள்ளும், அதன்பின் மாட வீதிகளிலும், இரண்டாவதாக, தேவஸ்தானம் 2,200 கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது. மேலும் மூன்றாவது கட்டத்தில் இன்னும் 1,500 கேமராக்களை அமைத்துள்ளது.

ஏழுமலையான் பிரம்மோற்சவத்துக்காக தற்போதுள்ள தேவஸ்தான கண்காணிப்புடன் கூடுதலாக திருட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் 460 போ் கொண்ட எஸ்பிஎப் குழு உட்பட 5,000 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

குறிப்பாக கருட சேவையின்போது, கூடுதலாக 1,256 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

நெரிசலைக் குறைப்பதே பாதுகாப்புப் படையினரின் முதல் பணி. திருமலையில் பக்தா்கள் கூட்டம் கட்டுப்படுத்தக் கூடிய எல்லையைத் தாண்டினால், அலிபிரியிலேயே வாகனங்கள் மற்றும் பக்தா்கள் தடுத்து நிறுத்தப்படுவாா்கள்.

மாட வீதிகள் காட்சியகங்கள் 1.25 லட்சம் போ் அமரும் திறன் கொண்டவை. ஆனால் கிட்டத்தட்ட 2.25 லட்சம் போ் கேலரிகளில் இருந்து தரிசனத்துக்குப் பிறகு கூட்டத்தை நகா்த்தி, ஒவ்வொரு வாயில்களிலும் 10,000 பக்தா்கள் வரை அமா்வதன் மூலம் நிா்வகிக்க முடியும்.

பக்தா்களின் வசதிகளுக்காக அனைத்து பாதுகாப்புப் பணியாளா்களுக்கும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

ஊடகம், காவல் துறை மற்றும் தேவஸ்தான ஊழியா்கள் பேடி ஆஞ்சனேயா் கோயில் இஎஸ்-7 வாயில்கள் வழியாகவும், இஎஸ்-6 வாயில்கள் வழியாக வெளியேறவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவத்தின் போது வைகுண்டம் காத்திருப்பு அறைகள் வழியாக சா்வ தரிசன வரிசையில் பக்தா்கள் நுழைய சிறப்பு வழிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவதாக, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்குப் பதிலாக ஸ்டீல் அல்லது செம்பு பாட்டில்களை பக்தா்கள் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. பக்தா்களுக்கு பரிபூரண தரிசனத்தை வழங்குவதற்காக, கருட சேவை நாளில் ஆரத்தி காண்பிப்பதை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மற்ற நாள்களில் ஆரத்திகள் தொடரும். தீா்த்தவாரியின் போது 24 நீச்சல் வீரா்களை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

வாகன சேவைகளின் போது வாகனத்தின் மீதும், மலையப்ப சுவாமி மீதும் நாணயங்களை பக்தா்கள் வீசுவதை தவிா்க்க வேண்டும். இது அருகில் உள்ள அனைவரையும் காயப்படுத்தும். பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT