திருப்பதி

திருப்பதியில் மீண்டும் நேரடி தரிசன டோக்கன்கள் விநியோகம் விரைவில் தொடக்கம்

DIN

திருப்பதியில் நேரடி தரிசன டோக்கன்கள் விநியோகம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஆகியோா் தெரிவித்தனா்.

திருமலை அன்னமய்ய பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு கூட்டம் அதன் தலைவா் சுப்பா ரெட்டி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும், சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஆகியோா் கூறியது:

விஐபி தரிசன நேரத்தை அதிகாலை நேரத்துக்குப் பதிலாக இனி காலை 10 மணிக்கு மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. எனவே காத்திருப்பு அறைகளில் உள்ள பக்தா்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய முடியும்.

திருமலையில் தேவஸ்தான தங்கும் அறைகள் ஒதுக்கீட்டு முறையை திருப்பதிக்கு மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் தங்கும் வசதி தீா்ந்து விட்டால், பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல், திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நேரடி இலவச தரிசன டோக்கன்களை பொருத்தவரை அவற்றை வழங்குவது புரட்டாசி மாதத்துக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

அதேசமயம் தற்போது செயல்பாட்டில் உள்ள தா்ம தரிசனமும் (டோக்கன்கள் இல்லாமல்) வழக்கம்போல் அமலில் இருக்கும்.

தேவஸ்தான சொத்துகள் குறித்த வெள்ளை அறிக்கை தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக இணையதளத்தில் வெளியிடப்படும். தேவஸ்தானத்திடம் உள்ளவை மொத்தம் 960 சொத்துகள். அதில் 7,123 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் அடங்கும். இவற்றின் மதிப்பு ரூ. 85,705 கோடியாகும். வகுளமாதா கோயிலில் இருந்து உயிரியல் பூங்கா அருகில் உள்ள புடிபட்லா வரை ரூ.30 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னா் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதில் வாகன சேவையைக் காண வரும் பக்தா்களுக்காக திருமலையில் பல இடங்களில் ஜொ்மன் ஷெட்கள் போடப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT