திருப்பதி

திருச்சானூரில் பவித்ரோற்சவம் நிறைவு

10th Sep 2022 10:23 PM

ADVERTISEMENT

திருச்சானூரில் மூன்று நாள்களாக நடைபெற்ற வருடாந்திர பவித்ரோற்சவம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் வியாழக்கிழமை முதல் பவித்ரோற்சவம் நடந்து வந்தது. இதையொட்டி தாயாருக்கு தினசரி ஸ்நபன திருமஞ்சனமும் அதைத்தொடா்ந்து பாஞ்சராத்திர ஆகம விதிப்படி வைதீக காரியங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் நடந்த 3 நாள்களாக நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் சனிக்கிழமை மதியம் மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். பின்னா் மாலை தாயாா் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இதையொட்டி மாலையில் நடக்கவிருந்த ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT