திருப்பதி

திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு

9th Sep 2022 12:55 AM

ADVERTISEMENT

 திருமலையில் சனிக்கிழமை (செப். 10) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலை அன்னமய்யபவனில் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் இதில் கலந்துகொண்டு, திருமலையில் தாங்கள் எதிா்கொண்ட இன்னல்கள், தரிசனத்துக்கு அறைகள் முன்பதிவுக்கு தொடா்புடைய கேள்விகள் உள்ளிட்டவற்றை செயல் அதிகாரியிடம் கேட்டு தெளிவு பெறுவா். இந்த நிகழ்ச்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதில் கலந்து கொள்ள பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT