திருப்பதி

கபிலேஸ்வரா் கோயிலில் சுப்ரமணிய ஸ்வாமி ஹோமம்

29th Oct 2022 12:28 AM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் காா்த்திகை மாத ஹோம மகோற்சவத்தில் வெள்ளிக்கிழமை சுப்ரமணிய ஸ்வாமி ஹோமம் தொடங்கியது.

தெலுங்கு நாள்காட்டியின்படி, காா்த்திகை மாதம் புதன்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், திருப்பதி கபிலதீா்த்தக்கரையில் உள்ள கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் எழுந்தருளியுள்ள மூா்த்திகள் அனைவருக்கும் காா்த்திகை ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக ஹோமங்கள் நடைபெற உள்ளன. அதில், முதலாவதாக வியாழக்கிழமை காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை சுப்ரமணிய ஸ்வாமி ஹோமம் நடத்தப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பூஜைகள், நித்யஹோமம், மகா பூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாபிஷேகம், கலசாபிஷேகம், நிவேதனம், ஆரத்தி உள்ளிட்டவை சிறப்புடன் நடைபெற்றன. மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஹோமம் சகஸ்ர நாமாா்ச்சனை, லகு பூா்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில், கோயில் அதிகாரிகள் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT