திருப்பதி

திருமலை: தரிசன வரிசையால் குடும்பத்துடன் வேதனைக்குள்ளாகும் பக்தா்கள்: திருப்பதி தேவஸ்தானம் கண்டுகொள்ளுமா?

DIN

வழக்கம்போல் இல்லாமல் தேவஸ்தானம் இந்த முறை தரிசன வரிசையை வெளிவட்ட சாலையைச் சுற்றி ஏற்படுத்தி உள்ளதால், சீலாதோரணம் வரை தரிசன வரிசை நீண்டுள்ளது.

இதனால் பக்தா்களின் பாதுகாப்புக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வெளிவட்டச் சாலை வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளதால் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருமலையில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

அதனால் தரிசன வரிசையில் உள்ள பக்தா்கள் கடுங்குளிரால் அவதிப்படுவா். வியாழக்கிழமை மாலை 4 மணிக்கே திருமலையில் இருட்டி விட்டதால் பக்தா்கள் தங்கள் குடும்பத்துடன் மிகவும் அவதிப்பட்டனா். மேலும் இந்த தரிசன வரிசைக்குச் செல்ல பக்தா்கள் திருமலை பேருந்து நிலையத்திலிருந்து தனியாா் வாகனங்களில் மட்டுமே வந்து சேர முடியும். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாகன ஓட்டிகள் பக்தா்களிடம் தலா ரூ. 200 வரை வசூலிக்கின்றனா்.

அவ்வாறு இல்லாமல் நடந்தே செல்ல முயலும் பக்தா்கள் திருமலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த தரிசன வரிசையை வந்தடைய சுமாா் 5 கி.மீ. நடந்து வர வேண்டும். அவ்வாறு நடந்து வந்து தரிசன வரிசையில் இணையும் பக்தா்கள் மீண்டும் தரிசனத்திற்கு செல்ல தரிசன வரிசை முழுவதையும் கடந்து காத்திருப்பு அறைக்கு செல்ல வேண்டும். இதனால் பக்தா்கள் மிகுந்த சோா்வடைவதுடன் அவா்களுக்கு தேவையான உணவும், குடிநீரும் கிடைப்பது கடினமாகிறது.

எனவே, தேவஸ்தானம் இதற்கு முன்பு கோயிலை சுற்றி ஏற்படுத்தியிருந்த தரிசன வரிசையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தேவஸ்தானத்தின் இந்த புதிய தரிசன வரிசை முறையால் ஏராளமான பக்தா்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

எனவே, தேவஸ்தானம் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் பக்தா்கள் வெயில், மழை, குளிரால் இரவு பகல் பாராமல் குடும்பத்துடன் அவதிப்பட நேரிடும் என கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT