திருப்பதி

பிரம்மோற்சவத்தின்போது 5.68 லட்சம் பக்தா்கள் வழிபாடு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 9 நாள்களிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனா்.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது தேவஸ்தானம் தா்ம தரிசனத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அனைத்து விதமான தரிசனங்களையும் ரத்து செய்திருந்தது.

பிரம்மோற்சவ நாள்களில் 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 வருவாய் கிடைத்துள்ளது.

பிரம்மோற்சவத்தின்போது 20 லட்சத்து 99 ஆயிரத்து 096 பக்தா்கள் அன்னதானம் உண்டனா். 2 லட்சத்து 20 ஆயிரத்து 816 போ் தலைமுடியை காணிக்கை செலுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

பிரம்மோற்சவ நாள்களில் தினசரி 3,750 ஸ்ரீவாரி சேவாா்த்திகள் பக்தா்களுக்கும், ஏழுமலையானுக்கும் சேவைகள் செய்தனா்.

மேலும் 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 சிறிய லட்டுகளும், 29 ஆயிரத்து 968 பெரிய லட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT