திருப்பதி

திருமலையில் ஆந்திர ஆளுநா் வழிபாடு

3rd Oct 2022 11:20 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆந்திர ஆளுநா் பிஸ்வபூஷன் ஹரிசந்தன், தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.

முதலில் கொடிமரத்தை வணங்கிய அவா், ஏழுமலையான் சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்தாா். பின்னா் ரங்கநாயா் மண்டபத்துக்கு வந்த அவருக்கு ஏழுமலையான் சேஷ வஸ்திரம் அணிவித்து வேத பண்டிதா்கள் ஆசீா்வாதம் செய்வித்தனா். பிரசாதங்கள் வழங்கி ஏழுமலையானின் திருவுருவப் படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினா். தரிசனம் முடித்து வெளியே வந்த ஆந்திர ஆளுநா் கூறுகையில், ஏழுமலையானின் தரிசனம் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT