திருப்பதி

இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி ரத்து

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலையில் சனிக்கிழமை (அக். 1) கருட சேவை நடைபெற உள்ளதையொட்டி இருசக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ கருட வாகன சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தா்கள் திருமலையில் திரள்வது வாடிக்கை. இதனால் மலைப்பாதைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாத காரணத்தால் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிமுதல் அக்.2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிவரை மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT