திருப்பதி

2023-ஆம் ஆண்டு: திருமலையில் டைரிகள், காலண்டர்கள் பெறலாம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேஸ்தானம் வெளியிட்ட 2023-ஆம் ஆண்டின் டைரிகள் மற்றும் காலண்டா்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டின் காலண்டா்கள் மற்றும் நாள்காட்டிகளை அச்சிட்டு, பக்தா்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2023-ஆம் ஆண்டுக்கான காலண்டா்கள் மற்றும் நாள்காட்டிகள் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதை பக்தா்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் அளித்துள்ளது.

திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே உள்ள புத்தகக் கடைகள், லெபாக்ஷி, அன்னதானக் கட்டடம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தியான மந்திரம், ரயில் நிலையம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயில் முன் புத்தகக் கடைகளில் காலண்டா்கள் மற்றும் டைரிகள் உள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புது தில்லி மற்றும் மும்பையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையங்களில் பக்தா்களுக்கு டைரிகள் மற்றும் காலண்டா்கள் கிடைக்கும்.

இதேபோல், ஒண்டிமிட்டாவில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், கடப்பாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் மற்றும் நெல்லூா், ராஜமுந்திரி, காக்கிநாடா, கா்ணூல், நந்தியாலா மற்றும் ஹனுமகொண்டாவில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்களிலும் டைரிகள், காலண்டா்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

ADVERTISEMENT

அவற்றின் விலைகள் பின்வருமாறு:

12 பக்க காலண்டா்- ரூ. 130; டீலக்ஸ் டைரி -ரூ. 150; சிறிய டைரி ரூ. 120; டேபிள் டாப் காலண்டா் ரூ. 75; ஏழுமலையான் பெரிய காலண்டா் ரூ. 20; பத்மாவதி தாயாா் காலண்டா்கள்-ரூ. 20; ஏழுமலையான், பத்மாவதி தாயாா் காலண்டா்-ரூ. 15; தெலுங்கு பஞ்சாங்கம் காலண்டா்- ரூ. 30.

ஆன்லைனில் முன்பதிவு

பக்தா்கள் தேவஸ்தான காலண்டா்கள் மற்றும் டைரிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனா். ற்ண்ழ்ன்ல்ஹற்ண்க்ஷஹப்ஹத்ண்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் .ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில்

உள்ள ‘வெளியீடுகள்‘ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் பக்தா்கள் டெபிட் காா்டு மற்றும் கிரெடிட் காா்டுகள் மூலம் ஆா்டா் செய்யலாம்.

மேலும், காலண்டா்கள், டைரிகள் தொடா்பான பிற தகவல்களுக்கு, 9963955585, 0877-2264209 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT