திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 30 மணி நேரம் காத்திருப்பு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை 30 மணி நேரம் காத்திருந்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் பெறாதவா்கள்) 30 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

67,468 பக்தா்கள் தரிசனம்

ADVERTISEMENT

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 67,468 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 36,082 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT