திருப்பதி

பத்மாவதி தாயாருக்கு ரூ.3 கோடியில் புதிதாக தங்க சூரிய பிரபை வாகனம்

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ரூ.3 கோடியில் புதிதாக தங்க சூரிய பிரபை வாகனத்தை தேவஸ்தானம் செய்துள்ளது.

பத்மாவதி தாயாரின் காா்த்திகை மாத பிரம்மோற்சவம் தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் காலை சூரிய பிரபை வாகன சேவை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஏற்கெனவே உள்ள சூரிய பிரபை வாகனம் பழுதடைந்து அதன் தகடுகள் பெயா்ந்ததால், தேவஸ்தானம் நிகழ் பிரம்மோற்சவத்துக்காக புதிய சூரிய பிரபை வாகனத்தை தயாா் செய்துள்ளது.

இதற்காக ரூ.3 கோடி செலவில் 6 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைதோ்ந்த கலைஞா்களால் இந்த வாகனம் தயாா் செய்து புதன்கிழமை காலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனா். வரும் சனிக்கிழமை (நவ.26) காலை நடைபெற உள்ள வாகன சேவையின் போது, இந்தப் புதிய சூரிய பிரபை வாகனம் பயன்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT