திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 40 மணி காத்திருப்பு

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை 40 மணி நேரம் காத்திருந்தனா்.

வார இறுதி நாள்களில் திருமலைக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே தா்ம தரிசனத்துக்கு (டோக்கன்கள் பெறாதவா்கள்) 40 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 5 முதல் 6 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 5 முதல் 6 மணிநேரமும் ஆனது. சனிக்கிழமை முழுவதும் 73,323 பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்; 41,041 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையாக சனிக்கிழமை ரூ.3.20 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT