திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு

14th Nov 2022 11:05 PM

ADVERTISEMENT

 

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

31 காத்திருப்பு அறைகளைக் கடந்து சிலாதோரணம் அருகில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் பெறாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 5 முதல் 6 மணி நேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 5 முதல் 6 மணி நேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 81,130 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; இவா்களில் 29,464 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT