திருப்பதி

இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள்

1st Nov 2022 12:15 AM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 1) முதல் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

திருப்பதியில் இதற்கு முன்பு வழங்கப்பட்ட இலவச நேரடி தரிசன டோக்கன்கள் சில தவிா்க்க முடியாத காரணங்களால் கடந்த ஏப். 2-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. தற்போது புரட்டாசி மாதம் முடிவுற்ற நிலையில், தேவஸ்தானம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை மீண்டும் தொடங்குகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இந்த தரிசன டோக்கன்கள் வழங்கப்படுவது தொடங்கப்படும். அன்றைய தரிசனத்துக்கான டோக்கன்கள் அன்றன்று மட்டுமே வழங்கப்படும். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT