திருப்பதி

ஒரே நாளில் 90,800 பக்தா்கள் தரிசனம்

31st May 2022 01:42 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 90, 885 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 35,707 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் அதிக அளவில் வருவதால், வார இறுதி நாட்களில் பக்தா்களின் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் வார இறுதி நாள்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தா்ம தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 19 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்துக்கு 7 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.

ADVERTISEMENT

காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் வழங்கப்படுகிறது. திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT