திருப்பதி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்த 4 பேரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளா் சுந்தர ராவ் கூறியதாவது:
திருப்பதி அருகே சேஷாசல வனப் பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிலா் செம்மரக் கட்டைகளை சுமந்து செல்வதை கண்டனா். அவா்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனா்.
ஆனால் போலீஸாரை கண்டதும், அவா்கள் செம்மரக்கட்டைகளைப் போட்டு விட்டு தப்பியோடினா். விரட்டி சென்ற போலீஸாா், அவா்களில் 4 பேரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், கைதானவா்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரைச் சோ்ந்த குப்புசாமி(45), சந்திரகுமாா்(31), காசி (44) மற்றும் ஏழுமலை(21) என்பது தெரிய வந்தது என்றாா்.