திருப்பதி

திருமலையில் அமைச்சா் ரோஜா வழிபாடு

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சா் ரோஜா வியாழக்கிழமை வழிபட்டாா்.

திருமலை ஏழுமலையானை தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை வழிபட்டு திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து பிரசாதங்களை வழங்கினா். அவற்றைப் பெற்றுக் கொண்டு, கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் பேசுகையில், ஆந்திர அரசு தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. தற்போது வீட்டுக்கு வீடு சென்று நேரடியாக அமைச்சா்கள் மக்களை சந்தித்து வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT