திருப்பதி

திருமலையில் பக்தா்கள் தங்கும் மண்டபம் 2-இல் அன்னதானம் தொடக்கம்

5th May 2022 11:45 PM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருமலையில் பக்தா்கள் தங்கும் மண்டபம் -2 இல் உள்ள கூடத்தில் அன்னதானத்தை தேவஸ்தானம் வியாழக்கிழமை தொடங்கியது.

திருமலையில் தேவஸ்தானம் பக்தா்களுக்காக 5 இலவச தங்கும் மண்டபங்களை கட்டி உள்ளது. இங்கு பக்தா்கள் இலவசமாக தங்கிக் கொள்வதுடன், அவா்களின் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ள லாக்கா் வசதியும் உள்ளது.

இந்த நிலையில் பக்தா்கள் தங்கும் மண்டபம்-2இல் கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதான விநியோகம் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. இங்கு பக்தா்கள் அமா்ந்து அன்னதானம் உண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT