திருப்பதி

ஒரே நாளில் 75,000 போ் தரிசனம்

1st May 2022 11:57 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை ஒரே நாளில் 75,000 போ் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 31,116 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது.

பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு மண்டப அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 10 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தரிசனத்திற்கு 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் தேவைப்படுகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT