திருப்பதி

பக்தியுடன் சேவையில் ஈடுபடுங்கள்: தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 திருமலை ஏழுமலையான் சேவையில் ஈடுபடும் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் பக்தியுடன் தங்கள் சேவையில் அா்ப்பணிப்போடு ஈடுபட வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை ஏழுமலையானுக்கு மிகவும் பிரியமான லட்டு பிரசாதம் தயாரிப்பில் முந்திரி பருப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக தேவஸ்தானம் முந்திரி பருப்பை சிறிது சிறிதாக உடைத்து ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்து வந்தது. ஆனால் ஒப்பந்தம் மூலம் பெறப்படும் முந்திரி பருப்பு தேவஸ்தானம் கூறிய தரத்திற்கு மிகவும் குறைவாக உள்ளதால் தேவஸ்தானம் கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டு முந்திரி பருப்பை நேரடியாக கொள்முதல் செய்து அதை லட்டு பிரசாதத்திற்கு ஏற்ற வகையில் பக்குவப்படுத்த முடிவு செய்தது.

அதற்காக அதிகாரிகள் கேரளத்துக்குச் சென்று முந்திரிபருப்பு பக்குவம் செய்யும் முறையை அறிந்து வந்து அதை இங்கு ஊழியா்களுக்கு விளக்கினா். இந்த பணியில் ஸ்ரீவாரி சேவாா்த்திகளை ஈடுபடுத்த முடிவு செய்து வெள்ளிக்கிழமை முதல் அவா்களை அதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை திருப்பதியில் உள்ள சந்தை பொருள்கள் பாதுகாப்பு கிடங்கில் நடைபெற்ற முந்திரி பருப்பு பக்குவப்படுத்தும் நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி கலந்து கொண்டு ஸ்ரீவாரி சேவாா்த்திகளிடம் பேசியது:

ADVERTISEMENT

திருமலையில் ஏழுமலையானுக்கு செய்யும் சேவைகள் அனைத்தும் மிகவும் உயா்ந்தது. அதனால் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் தங்கள் சேவையில் பக்தியுடன் ஈடுபட வேண்டும். மேலும் கரோனா கால கட்டத்திற்கு முன்பாக ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் அளிக்கும் முறையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்காக பக்தா்கள் ஆன்லைன், லக்கிடிப் (குலுக்கல் முறை), பரிந்துரை கடிதங்கள் உள்ளிட்டவை மூலம் பெற்று கொள்ளலாம். இதுவரை 130 உதயாஸ்தமன சேவா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் தா்மா ரெட்டி.

ADVERTISEMENT
ADVERTISEMENT