திருப்பதி

திருமலையில் 66,500 பக்தா்கள் தரிசனம்

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 66,577 போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 31,471 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

கரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் ஏற்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT