திருப்பதி

திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் பலமணி நேரம் வாகனங்கள் காத்திருப்பு

19th Mar 2022 10:40 PM

ADVERTISEMENT

திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியில் ஸ்கேனா்கள் பழுதடைந்ததால் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருமலையில் வார இறுதியில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளதால் சனி, ஞாயிறுகளில் திருமலைக்கு வரும் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனால் திருப்பதியில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் கோவிந்தராஜ சுவாமி சத்திரத்தில் அதிகாலை முதல் டோக்கன்கள் பெற பல மணிநேரம் நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனா்.

மேலும் திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் ஸ்கேன் செய்ய ஏற்படுத்தியுள்ள ஸ்கேனா்கள் பழுதடைந்ததால், வாகனங்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டன. குழந்தைகளுடன் தொலை தூரங்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் இதனால் அவதிக்குள்ளாயினா். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணிநேர காத்திருப்புக்குப் பின்னா் பக்தா்களின் வாகனங்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

எனவே, தற்போது சொந்த வாகனங்களில் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேவஸ்தானம் ஸ்கேனா்களை எப்போதும் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள பகல் வேளைகளில் நீண்டநேரம் காத்திருப்பது பக்தா்களுக்கு அசெளகரித்தை ஏற்படுத்தும் என்று தேவஸ்தானத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT