திருப்பதி

திருமலையில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்

14th Mar 2022 10:50 PM

ADVERTISEMENT

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை ஸ்ரீருக்மணி சமேத கிருஷ்ணா் திருக்குளத்தில் தெப்பத்தில் வலம் வந்தனா்.

பெருமை வாய்ந்த தெப்போற்சவம் திருமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாகலமாகத் தொடங்கியது. தெப்போற்சவத்தின் முதல்நாள் சீதாலட்சுமண கோதண்டராம சுவாமி திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தனா்.

அதன் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் இரண்டடுக்கு தெப்பத்தில் 3 முறை வலம் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தபோது மங்கள வாத்தியங்கள், வேதகோஷங்கள், அன்னமாச்சாா்யா கீா்த்தனைகள் இசைக்கப்பட்டன.

கரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குளத்தில் நடத்தப்பட்ட தெப்போற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT