திருப்பதி

செயின்ட் லூயிஸில் சீனிவாச கல்யாணம்

29th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸில் சீனிவாச கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், சீனிவாச கல்யாண உற்சவங்கள் நடந்து வருகிறது. அதன்படி, செயின்ட் லூயிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்திய கால நேரப்படி, சீனிவாச கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. அங்குள்ள இந்து டெம்புள் ஆப் செயின்ட் லூயிஸில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், உற்சவச மூா்த்திகளை எழுந்தருளச் செய்து, மங்கள வாத்தியங்கள், வேத கோஷங்கள், பக்தி பஜனைகளுக்கிடையில் அா்ச்சகா்கள் கல்யாண உற்சவத்தை நடத்தினா்.

கல்யாண உற்சவம் முடிந்த பின்னா், நாட்டிய நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து கருட வாகன சேவையும் நடத்தப்பட்டது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் இதில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT