திருப்பதி

தேவஸ்தான இணையதளத்தில் இன்று 46,000 ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 46,000 ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட உள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையளத்தில் செப்டம்பா் மாதத்திற்கான ஆா்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்காரம் உள்ளிட்ட சேவைகள் மற்றும் குலுக்கல் முறையில் அளிக்கப்படும் சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதளபாத பத்மாராதனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளும் வெளியிடப்பட உள்ளன.

இதில் 8,070 டிக்கெட்டுகள் குலுக்கல் முறையிலும், இதர 38,400 டிக்கெட்டுகள் முன் வருபவா்களுக்கே முன் உரிமை என்ற முறையிலும் வழங்கப்பட உள்ளன.

சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதளபாத பத்மாராதனை உள்ளிட்ட டிக்கெட்டுகளுக்காக பக்தா்கள் தங்களின் பெயா், ஆதாா் அட்டை எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் வரும் ஜூன் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு பக்தா்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் பெற்ற பக்தா்கள் 2 நாள்களுக்குள் தங்களின் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூன் 29-ஆம் தேதி மதியம் 12 இணையதள முன்பதிவில் வைக்கப்பட உள்ளன. இதை பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT