திருப்பதி

ஒரே நாளில் 94,400 போ் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை ஒரே நாளில் 94,411 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 46,283 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு செல்லும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் தா்ம தரிசன காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளை கடந்து பக்தா்கள் வெளியில் ஆஸ்தான மண்டபம் அருகில் வரை தா்ம தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆனது. ரூ.300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் பிடித்தது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT