திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி

27th Jun 2022 11:45 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 4.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை தேவஸ்தானம் வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. இந்த நிலையில், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 4.24 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT