திருப்பதி

டல்லாசில் ஏழுமலையான் கல்யாண உற்சவம்

27th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை சீனிவாச கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளிநாடு வாழ் இந்தியா்களின் சங்கத்துடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் சீனிவாச கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி டல்லாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை சீனிவாச கல்யாண உற்சவம் நடைபெற்றது.

வைகானச ஆகம விதிப்படி நடந்த இந்த கல்யாண உற்சவத்தில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். முறையாக புண்ணியாவசனம், விஷ்வக்சேனா் ஆராதனை, அங்குராா்ப்பணம், மகாசங்கல்பம், கன்னியாதானம், மாங்கல்யதாரணம், வாரணமாயிரம், ஆரத்தி உள்ளிட்ட காரியங்கள் சிறப்பாக நடந்தேறின. இதில் தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி கலந்து கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT