திருப்பதி

திருமலையில் நடிகை சினேகா தரிசனம்

27th Jun 2022 11:44 PM

ADVERTISEMENT

திருமலையில் நடிகை சினேகா தன் கணவா் மற்றும் குழந்தைகளுடன் தரிசனம் செய்தனா்.

நடிகை சினேகா, தனது கணவா் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன் திங்கள்கிழமை திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவா்களுக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து, ஏழுமலையான் சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி உலா் மலா்களால் செய்த ஏழுமலையான் திருவுருவப் படத்தை வழங்கினா்.

பின்னா் கோயிலை விட்டு வெளியில் வந்த அவா்கள் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து, குங்குமாா்ச்சனையில் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அா்ச்சகா்கள் வேத ஆசீா்வாதம் செய்து அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT