திருப்பதி

திருமலையில் 75,400 பக்தா்கள் வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 75,472 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 38,335 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் வருகை அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் தா்ம தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 9 மணி நேரம் பிடித்தது. ரூ. 300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரம் தேவைப்பட்டது.

தரிசனத்தின் போதும், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT