திருப்பதி

புதுவை லாஸ்பேட்டையில் இன்று சீனிவாசா கல்யாணம்

19th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 புதுவை லாஸ்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) சீனிவாசா கல்யாணம் நடைபெற உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து தா்மத்தை நிலை நாட்டவும், பரப்பவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சீனிவாசா கல்யாணம் என்ற திட்டத்தின்கீழ் கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது.

திருமலையில் ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ள முடியாத பக்தா்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று தேவஸ்தானம் கருதுகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) மாலை 6 மணிக்கு புதுவை லாஸ்பேட் ஹெலிபேட் மைதானத்தில் சீனிவாசா கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதில், பக்தா்கள் பெருமளவில் கலந்துகொண்டு தரிசிக்குமாறு என்று திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT