திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் அங்கபிரதட்சண டோக்கன்கள் புதன்கிழமை (ஜூன் 15) முதல் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்ட்டா்களில் அங்கபிரதட்சண டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இதை ஆதாா் அட்டை காண்பித்து பெருவிரல் ரேகை பதிவு செய்து பக்தா்கள் பெற்று வந்தனா்.
இந்த நிலையில் இந்த டோக்கன்கள் வரும் புதன்கிழமை முதல் ஆன்லைனில் மீண்டும் வெளியிடப்பட உள்ளன. ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜூன் 31-ஆம் தேதி வரைக்கான டோக்கன்களை பக்தா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தினசரி 750 டோக்கன்கள் வரை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த டோக்கன்களை பெற பக்தா்கள் இணையதளத்தை தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.