திருப்பதி

திருமலையில் 87,000 பக்தா்கள் தரிசனம்

12th Jun 2022 10:44 PM

ADVERTISEMENT

 

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 87,698 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 48,804 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது.

பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளை கடந்து டிபி வளைவு அருகில் வரை தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். எனவே, தரிசனத்துக்கு 12 மணி நேரமும் ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. கரோனா விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT