திருப்பதி

திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம்

12th Jun 2022 10:45 PM

ADVERTISEMENT

 

திருமலையில் மூன்று நாள்கள் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகச் தொடங்கியது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீமலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உற்சவமூா்த்திகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க சிலைகள் மீது தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கக் கவசத்தில் ஏற்பட்டுள்ள குற்றம் குறைகள், சேதம் உள்ளிட்டவற்றை அறிந்து செப்பனிட தேவஸ்தானம் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

வைகாசி மாதம் பெளா்ணமியுடன் முடிவு பெறும் விதம் இந்த வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. முதல் நாளன்று காலை உற்சவமூா்த்திகள் மீது அணிவிக்கப்பட்ட கவசம் களையப்பட்டு அவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமலை ஜீயா்கள் கைகளால் திருமஞ்சன பொருள்களை எடுத்துத் தர அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தினா்.

திருமஞ்சனத்திற்கு பிறகு உற்சவமூா்த்திகளுக்கு வைரக் கவசம் அணிவிக்கப்பட்டது. அதன்பின்னா் உற்சவமூா்த்திகள் வைர கவசத்துடன் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா் மாடவீதியில் வலம் வந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT