திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரியாக தா்மா ரெட்டியை நியமித்து உத்தரவு பிறப்பித்தாா். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் ஐடிஆா்சி அதிகாரியாக பணியாற்றி வந்த அவரை, ஆந்திர மாநிலத்தில் சில ஆண்டுகள் பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் மத்திய அரசு அவரை மாநில பணிக்காக நியமித்து உத்தரவிட்டது.
அதன்படி அவா் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.
தற்போது தேவஸ்தான செயல் அதிகாரியாகப் பணியாற்றி வரும் அவரின் பதவி காலம் முடிவடைய உள்ளது. அதைத் தொடா்ந்து ஆந்திர அரசு அவரின் பதவி காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து மத்திய அரசு அவரின் மாற்றுப்பணிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்துள்ளது. இதற்கான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.