திருப்பதி

திருமலையில் 76,900 பக்தா்கள் தரிசனம்

8th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை 76,921 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 39,568 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனா். இந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் அவா்களை தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் மண்டப அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்துக்கு 10 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முககவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

ADVERTISEMENT

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT