திருப்பதி

69,000 பக்தா்கள் தரிசனம்

2nd Jun 2022 12:30 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 69,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. வார இறுதி நாள்களில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தா்ம தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், பக்தா்கள் தரிசனம் இந்த நாள்களில் 70,000-ஐ தொடுகிறது.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால், பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் அனுமதிக்கிறது. திருமலைக்கு வரும் பக்தா்கள் ஆதாரை காட்டியபின், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

புதன்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 4 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். இந்த தரிசனத்துக்கு 3 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆகிறது. செவ்வாய்கிழமை 69,848 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். 28,716 பக்தா்கள் முடி காணிக்கைச் செலுத்தினா்.

ADVERTISEMENT

தரிசனம், வாடகை அறைகள் உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 1800-425-4141, 93993 99399 ஆகிய இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT