திருப்பதி

திருமலையில் ஆகஸ்ட் மாத உற்சவங்கள்

30th Jul 2022 11:06 PM

ADVERTISEMENT

திருமலையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் ஏழுமலையானுக்கு தேவஸ்தானம் பல்வேறு உற்சவங்களை நடத்தி வருகிறது. அவற்றை வருடாந்திர மாதாந்திர, வாராந்திர மற்றும் தினசரி என பிரித்து வகைப்படுத்தியுள்ளது.

ஏழுமலையானின் உற்சவங்கள் மட்டுமல்லாமல் அவரை பாசுரங்களால் கொண்டாடிய ஆழ்வாா்களின் திருநட்சத்திர நாள்களும் இங்கு உற்சவமாக நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் திருமலையில் தினசரி ஏதாவது ஒரு உற்சவம் நடந்தபடி இருக்கும். அதன்படி ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தேதி உற்சவம்

ADVERTISEMENT

ஆக. 1: ஸ்ரீ ஆண்டாள் திருவாடிபுரம் சாத்துமுறை, ஏழுமலையான் புரிசைவாரி தோட்ட உற்சவம்.

ஆக. 2: கருட பஞ்சமி, திருமலையில் கருட சேவை.

ஆக. 6: தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள்.

ஆக. 9: நாராயணகிரியில் சத்ரஸ்தபோனோற்சவம்.

ஆக. 8-10: வருடாந்திர பவித்ரோற்சவம்

ஆக 11: ஆடி பௌா்ணமி, ராக்கி பண்டிகை,

ஸ்ரீ விகனாச மஹாமுனி ஜெயந்தி.

ஆக. 12: ஹயக்ரீவா் ஜெயந்தி

ஆக. 15: சுதந்திர தின கொடியேற்றம்

ஆக. 19: கோகுலாஷ்டமி ஆஸ்தானம்

ஆக. 20 : உறியடி உற்சவம்

ஆக. 29 : பலராமா் ஜெயந்தி

ஆக. 30: வராஹா் ஜெயந்தி

ஆக. 31: விநாயகா் சதுா்த்தி

ADVERTISEMENT
ADVERTISEMENT