திருப்பதி

ஒரே நாளில் 84,000 பக்தா்கள் வழிபாடு

17th Jul 2022 11:44 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முழுவதும் 84,885 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 41,211 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில் பக்தா்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்பதிவு டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு பக்தா்களை அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 12 மணி நேரம் தேவைப்பட்டது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவா்களுக்கு 5 முதல் 6 மணி நேரம் தரிசனத்துக்கு ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT