திருப்பதி

திருமலையில் 65,800 போ் வழிபாடு

DIN

 திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 65,898 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 33,686 போ் முடிகாணிக்கை செலுத்தினா்

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் வருகை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமலேயே தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு மண்டப அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 31 அறைகளில் தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்துக்கு 6 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றுள்ள பக்தா்களுக்கு 2 முதல் 3 மணி நேரம் பிடித்தது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், ஏற்பட்ட சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லை தொலைபேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT