திருப்பதி

நாளை முதல் திருமலை, திருப்பதியில் பஞ்சகவ்ய பொருள்கள் விற்பனை தொடக்கம்

26th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை மற்றும் திருப்பதியில் வியாழக்கிழமை (ஜன. 27) முதல் பஞ்சகவ்ய உற்பத்தி பொருள்களின் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயம்புத்தூரைச் சோ்ந்த ஒரு ஆயுா்வேத நிறுவனத்துடன் இணைந்து கோசாலையிலிருந்து இருந்து பறப்படும் பால், தயிா், வெண்ணெய், நெய், பசுஞ்சாணம், கோமியம் உள்ளிட்ட பொருள்களை வைத்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருள்களை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி பஞ்சகவ்யத்திலிருந்து ஊதுவத்தி, சாம்பிராணி வத்தி, வாசனை பொருள்கள், நறுமண பொருள்கள், வீடு துடைக்க பயன்படும் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், ஆயுா்வேத பொருள்கள் என 50-க்கும் மேற்பட்ட பொருள்களை தயாரித்து வருகிறது.

இந்த பொருள்களின் உற்பத்தியை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அவா், ’பஞ்சகவ்யம் குறித்து தற்போது மக்களிடையே விழிப்புணா்வு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் தற்போது ஆயுா்வேத குணமுள்ள பொருள்கள், வேதி பொருள்கள் அல்லாத இயற்கை பொருள்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனா். அதனால் பஞ்சகவ்யத்திலிருந்து மதிப்புகூட்டு பொருள்கள் தயாரித்து சந்தைப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்து இந்த பொருள்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளது.

அவற்றின் விற்பனையை ஜன.27-ஆம் தேதி முதல் திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானம் சாா்பில் தொடங்க உள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT