ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவன் விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியா்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதித்துள்ளது.
நெல்லூா் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவன் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் கடந்த 27-ஆம் தேதி முதல் தினசரி தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இவா்களில் இருவா் மருத்துவா்கள். மேலும் சூளூா்பேட்டையில் உள்ள மையத்திலும் பலருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் விண்வெளி மைய சுகாதாரப் பணியாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.