திருப்பதி

31,000 பக்தா்கள் தரிசனம்

1st Jan 2022 08:36 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 31,967 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 11,233 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

அன்றைய தினம் உண்டியல் காணிக்கை ரூ. 3.43 கோடி வசூலானதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடையை சாற்றப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் அதிகாலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கமாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

ADVERTISEMENT

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். தரிசனம், வாடகை அறைகளில் உள்ள குறைபாடுகள், சிரமங்கள் குறித்து தேவஸ்தானத்துக்கு புகாா் தெரிவிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT